பொதுவாக நாம் உடுத்தும் துணிகளை washing machine-ல் போட்டு துவைக்கும்பொழுது கையில் துவைக்கும் திருப்தி washing machine-ல் துவைக்கும் பொழுது கிடைப்பதில்லை இந்நிலையில் எப்படி அதில் பள பளவென துணிகளை துவைக்கவேண்டுமென்பதை பற்றி இத்தொகுப்பில் பார்க்கலாம்.
washing machine-ல் துணிகளை துவைக்கும்பொழுது எப்பொழுதுமே அதன் கொள்ளவிற்கு (மெஷின் ட்ரம் அளவு ) கொஞ்சம் குறைவாக தான் துணிகளை போட வேண்டும்.
அதை விட அதிகமாக போட்டால் அழுக்கு போகவே போகாது,வாஷிங் மிஷினில் துணியை போடுவதற்கு முன் அரை மணி நேரம் நல்ல தண்ணீரில் உப்பு சேர்த்து ஊற வைத்த பிறகு மெஷினில் போட்டு துவைத்தால் துணியில் உள்ள அழுக்குகள் நீங்கிவிடும் என சொல்லப்படுகிறது.
மிஷினில் துணிகளை போட்ட பிறகு அலுமினியம் பேப்பரை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி, பால் போல் இரண்டு பேப்பரை உருட்டி எடுத்துக் கொள்ளுங்கள். மிஷினில் துணிகளுக்கு இடையில் இதை போட்டு விட்டு, நீங்கள் எப்பொழுதும் போல் துணி துவைக்க ஆரம்பித்து விடுங்கள். துணிகளில் உள்ள அழுக்குகள் சுத்தமாக நீங்கிவிடும் இதனால் மெஷினுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என கூறப்படுகிறது.
அடுத்ததாக ஆஸ்பிரின் மாத்திரை இதை உங்கள் துணிகளின் அளவிற்கு ஏற்றபடி நான்கு அல்லது ஐந்து மாத்திரை எடுத்து நல்ல பவுடர் செய்ய செய்து துணி பவுடர், லிக்விட் எதுவாக இருந்தாலும் போடும் போது அத்துடன் சேர்த்து இந்த மாத்திரை பவுடரையும் சேர்க்க வேண்டும் . துணிகளில் உள்ள அழுக்குகள் மொத்தமாக நீங்கி விடும். இந்த முறை தான் பெரும்பாலும் லண்டரிகளில்(laundries) பயன்படுத்துகிறார்கள். குழந்தைகள் இருக்கும் வீடுகளில் இதை தவிர்ப்பது அல்லது கொஞ்சம் கவனமாக கையாளுவது சிறப்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது.