ஜோதிகா விஷயத்தில் அட்லியால் முடியாததை தளபதி 68 இயக்குநர் வெங்கட் பிரபு செய்து காட்டுவாரா…?

85
Advertisement

தளபதி 68 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஜோதிகா ஒப்புக்கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68 படத்தில் ஜோதிகா நடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

லியோ படத்தை அடுத்து விஜய் நடிக்கவிருக்கும் தளபதி வெங்கட் பிரபு இயக்குகிறார். அந்த படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. ஏ.ஜி.எஸ். நிறுவனம் இதுவரை தயாரித்த படங்களிலேயே தளபதி 68 தான் அதிக செலவில் உருவாகியுள்ளது. இந்நிலையில் தளபதி 68 படத்தின் ஹீரோயின் ஜோதிகா என தகவல் வெளியாகியுள்ளது.

தளபதி 68 படம் தொடர்பாக ஜோதிகாவை இதுவரை ஒப்பந்தம் செய்யவில்லை. இருப்பினும் விஜய் படத்தில் நடிக்க ஜோதிகா ஒப்புக்கொள்வாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். முன்னதாக அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான மெர்சல் படத்தில் ஹீரோயினாக நடிக்க ஜோதிகாவிடம் கேட்டார்கள். ஆனால் மெர்சல் படத்தில் நடிக்க ஜோதிகா மறுத்துவிட்டார். இந்நிலையில் அட்லியால் முடியாததை வெங்கட் பிரபு செய்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் வெளியான குஷி படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார் ஜோதிகா.

அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அதன் பிறகு திருமலை படத்தில் விஜய்யும், ஜோதிகாவும் சேர்ந்து நடித்தார்கள். தளபதி 68 படத்தில் நடிக்க ஜோதிகா ஒப்புக்கொண்டால் 20 ஆண்டுகளுக்கு பிறகு அவர் விஜய்யுடன் சேர்ந்து நடித்தார்.