தட்கல் ரயில் என்பது, பயணத்தின் கடைசி நேரத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய விரும்பும் பயணிகளுக்காக இந்திய ரயில்வே அறிமுகப்படுத்திய ஒரு திட்டம். “தட்கல்” என்றால் “உடனடி” என்று பொருள் ..
பயணம் செய்வதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாக, டிக்கெட் முன்பதிவு செய்யும் நடைமுறையில் பின்பற்றப்பட்டு முறையாகும்.
இதன்படி, குளிர்சாதன பெட்டிகளில் பயணம் செய்வதற்கான தட்கல் டிக்கெட் முன்பதிவு காலை 10 மணிக்கும், இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் பயணம் செய்ய முன்பதிவு காலை 11 மணிக்கும் தொடங்கும்.
இந்த நிலையில், இந்த தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கான நேரம் மாற்றப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதனால் பயணிகளிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில்,குளிர்சாதன வசதி அல்லது குளிர்சாதன வசதி அல்லாத வகுப்புகளுக்கான தட்கல் அல்லது பிரீமியம் தட்கல் முன்பதிவு நேரங்களில் மாற்றம் எதுவும் முன் மொழியப்படவில்லை என்றும்,முகவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட முன்பதிவு நேரங்களும் மாற்றப்படவில்லை என்றும் IRCTC விளக்கமளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .