Thursday, February 19, 2026

கூலி படத்தில் சிவகார்த்திகேயன் இருக்காரா? இல்லையா? : உண்மை என்ன?

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி’ படத்தில் ரஜினி, சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன், ஆமிர்கான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இப்படம் வரும் ஆகஸ்ட் 14 திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்துக்கான ஆன்லைன் டிக்கெட் புக்கிங் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ‘கூலி’ படத்தில் சத்யா என்ற கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக போஸ்டர் ஒன்று இணையத்தில் வேகமாக பரவியது. அதே சமயம் இது உண்மையா என ரசிகர்கள் சிலர் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

பொதுவாக லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் கேமியோ ரோல்களில் முன்னணி நடிகர்கள் நடிப்பதாக தகவல்கள் பரவியதால், கூலி திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இது ஒரு ஃபேன் மேட் போஸ்டர் என்றும் சிவகார்த்திகேயன் ‘கூலி’ படத்தில் நடிக்கவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Related News

Latest News