அட இன்னைக்கு என்ன பா சம்பவம் பண்ணி வச்சிருக்கு இந்த தங்கம் விலை…” என்பதை தெரிந்துகொள்வதற்காகவே செய்தியை பார்ப்பவர்கள் வரவர அதிகரித்துவிட்டனர். ஏனென்றால் ஒவ்வொரு நாளும் தங்கம் செய்யும் சம்பவம் அப்படி. விலை இப்படித்தான் இருக்கும் என்று கணிக்க முடியாத நிலையில் மக்களை அலைக்கழித்துவிடுகிறது… ஒரு வழியாக்கிவிடுகிறது…
“நான் மட்டும் ஒன்றும் சளைத்தவன் இல்லை…” என்று தங்கத்துக்கே Tough கொடுக்கும் கதையாக மற்றொரு பக்கம் வெள்ளி விலையும் போட்டி போட்டு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த அமளி துமளிக்கு நடுவே பொருளாதார வல்லுநரான ஆனந்த் சீனிவாசன் இது தொடர்பாக தனது யூடியூப் சேனலில், “தங்கம் அதிகரிக்கும் அளவுக்கு வெள்ளி அதிகரிக்காது.
ஆனால் தங்கத்திற்கும் பணத்திற்கும் தொடர்பு இருக்கிறது. அதேநேரம் வெள்ளிக்கும் பணத்திற்கும் தொடர்பு இல்லை. கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு லிங்க் இருந்தது உண்மை தான். ஆனால், அப்போது சில்வரையும் தங்கமாகக் கருதினார்கள். தங்கம், வெள்ளி என இரண்டையும் அப்போது கரன்சியாக கருதினர். குறிப்பாக இந்தியாவில் வெள்ளி கரன்சியாக கருதப்பட்டது.
110 ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளி விலை அதிகரித்த நிலையில், பலரும் கரன்சியாக இருந்த வெள்ளி காயினை உருக்கி விற்றுவிட்டனர். அதன் பிறகு பிரிட்டனின் லார்ட் கீன்ஸ் வந்து சிக்கலைச் சமாளித்தார்.
இதுபோல பிரச்சினை வந்ததால் நமது நாட்டில் வெள்ளிக்கும் கரன்சிக்கும் இடையேயான தொடர்பு கட் ஆகிவிட்டது. தங்கத்தை உலக நாடுகளின் மத்திய வங்கி வாங்கும். ஆனால், வெள்ளியை எந்தவொரு நாடும் வாங்காது. எனவே, வெள்ளியால் தங்கத்தை எட்டிப்பிடிக்கவே முடியாது. ஒருவேளை சீன மத்திய வங்கி வெள்ளியை வாங்கி குவிக்கிறது என வைத்துக் கொள்வோம். அப்போது தான் வெள்ளி விலை அதிகரிக்கும்” என்றார்.
மேலும் அவர் “அதாவது உலக நாடுகளின் மத்திய வங்கிகள் ஆபத்தான காலத்தில் உதவத் தங்கத்தை வாங்கி குவித்து வருகிறது. இந்தியா உட்பட பெரும்பாலான உலக நாடுகள் தங்கத்தின் கையிருப்பை அதிகரித்து வருகிறது. இதுவே தங்கம் விலை உயரப் பிரதானக் காரணம். இதுபோல வெள்ளியை உலக நாடுகள் கையிருப்பில் வைக்க டன் கணக்கில் வாங்கினால் மட்டுமே அதன் விலை படுவேகமாக உயரும்” என்று கூறியிருந்தாலும் இது நடப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்றே கூறப்படுகிறது.
இது ஒரு செய்தி மட்டுமே. பொதுமக்கள் இதை தங்கத்துக்கான முதலீடாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.