விசா கிடைக்குமா, கிடைக்காதா? இறுதிக்கட்ட பதற்றத்தில் டென்னிஸ் வீராங்கனை!

இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனையான மணிகா பத்ரா, அக்டோபர் 20-ம் தேதி லண்டனில் நடைபெறவுள்ள WTT ஸ்டார் கன்டென்டர் தொடரில் பங்கேற்கிறார். அவருடன் இந்திய வீரர்கள் சத்தியன், ஹர்மீத் தேசாய், தியாசித்லே உள்ளிட்டோரும் விளையாடவுள்ளனர்.

இந்நிலையில், இந்த போட்டியில் கலந்து கொள்ளும் முன் தங்களுக்கு இன்னும் விசா வழங்கப்படவில்லை என மணிகா பத்ரா கவலை தெரிவித்துள்ளார். அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டதாவது: ‘நானும் என் அணியினரும், சீனாவில் நடைபெற்ற போட்டி முடிந்தவுடன் லண்டனில் நடைபெறும் WTT ஸ்டார் கன்டென்டர் தொடருக்காக விசாவுக்கு விண்ணப்பித்தோம். முதலில் அக்டோபர் 17-ம் தேதி பயணம் செய்ய திட்டமிட்டிருந்தோம். ஆனால் எந்த புதுப்பிப்பும் இல்லாததால், தற்போது அக்டோபர் 19-ம் தேதி செல்ல தீர்மானித்துள்ளோம்.

இன்றைய நிலவரப்படி எங்கள் விசா விண்ணப்பங்கள் இன்னும் மதிப்பாய்வில் உள்ளன. எனது முதல் போட்டி அக்டோபர் 21-ம் தேதி நடைபெறவுள்ளது. போட்டியில் கவனம் செலுத்த வேண்டிய நேரத்தில், விசா status பற்றி கவலைப்பட வேண்டியிருக்கிறது என்பது வருத்தமளிக்கிறது. மற்ற நாட்டு வீரர்கள் லண்டனுக்கு புறப்பட்டு விட்டபோதும், நாங்கள் இன்னும் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

விசா செயல்முறைகளுக்கு வழக்கமான நேரம் தேவைப்படும் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். ஆனால், இது சாதாரண சுற்றுலா பயணம் அல்ல; நாங்கள் நாட்டை சர்வதேச அளவில் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காகப் பயணம் செய்யிறோம்,’ என மணிகா பத்ரா தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

Related News

Latest News