Saturday, April 19, 2025

வீதிக்கு வந்த ‘பனிப்போர்’ Captainஐ ‘தூக்கி’ அடிக்கும் RR?

இந்த 2025ம் ஆண்டு முதல் அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ், தங்களது கேப்டனை மாற்றி அதிர்ச்சி அளித்தது. அடுத்ததாக அந்த லிஸ்டில் லக்னோ, மும்பை அணிகள் இணையலாம் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்தநிலையில் ராஜஸ்தான் ராயல்ஸில், நிச்சயம் ஒரு கேப்டன் மாற்றம் இருக்கலாம் என தகவல்கள் கசிந்துள்ளன.

இதை உறுதிப்படுத்துவது போல அந்த அணியில், அடுத்தடுத்த சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் கையில் இருந்த வெற்றியை ராஜஸ்தான் பறிகொடுத்தற்கு, அணிக்குள் நடந்த முட்டல், மோதல்களே காரணம் என்று கூறப்படுகிறது.

இந்த தொடரின் முதல் சூப்பர் ஓவர் RR-DC மேட்சில் நடந்தது. இதில் நன்றாக ஆடிய நிதிஷ் ராணாவுக்கு பதிலாக, சிம்ரன் ஹெட்மயரை அனுப்பி RR சொந்த காசில், சூனியம் வைத்துக் கொண்டது. ராஜஸ்தானை சிதறடித்த Starc கூட, ”இரண்டு இடது கை பேட்ஸ்மேன்களை, ராஜஸ்தான் சூப்பர் ஓவரில் அனுப்பி வைத்தது ஆச்சரியமாக இருந்தது,” என்று பேசியிருந்தார்.

இந்தநிலையில் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், கேப்டன் சஞ்சு சாம்சன் இருவருக்கும் நடுவில் உள்ள பனிப்போர் தற்போது வீதிக்கு வந்துள்ளது. சூப்பர் ஓவருக்கு முன்னால் டக் அவுட்டில் அதுகுறித்து பேசும் டிராவிட், கேப்டன் சாம்சனை கண்டு கொள்ளவே இல்லை. இதுதொடர்பான வீடியோக்கள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதைப்பார்த்த ரசிகர்கள்,” டிராவிட் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தவரை, சாம்சனுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. தற்போது IPL தொடரிலும் அது தொடர்கிறது. வேறு டீமுக்கு செல்வது அவரது கிரிக்கெட் எதிர்காலத்திற்கு நல்லது,” என்று சமூக வலைதளங்களில் அட்வைஸ் செய்து வருகின்றனர்.

இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலும், விரைவில் ஒரு கேப்டன் மாற்றம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இந்த ரேஸில் ரியான் பராக், ஜெய்ஸ்வால் இருவரும் முன்னணியில் இருக்கின்றனர். இருவரில் ஒருவரை தங்களது அடுத்த கேப்டனாக RR அறிவிக்கலாம் என்று தெரிகிறது.

கடந்த 2018ம் ஆண்டு ராஜஸ்தான் அணியில் இணைந்த சாம்சன், 2021ம் ஆண்டில் இருந்து கேப்டனாக அணியை வழிநடத்தி வருகிறார். அவரின் தலைமையின் கீழ் அந்த அணி, 2022ம் ஆண்டு பைனலுக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

Latest news