வங்காளிகளை வெளிநாட்டினராக சித்தரித்தால் பாஜக எம்எல்ஏவின் வாயில் ஆசிட் வீசுவேன் என்று திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) தலைவர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார். மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்ட டிஎம்சி தலைவர் அப்துர் ரஹீம் பக்ஷி கூறிய இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து அவர் பேசியதாவது : “வேறு மாநிலங்களில் பணிபுரியும் வங்காளத்திலிருந்து புலம்பெயர்ந்த 30 லட்சம் தொழிலாளர்களை ரோஹிங்கியாக்கள் மற்றும் வங்கதேசத்தினர் என்று வெட்கமின்றி அழைப்பவர்களுக்கு நான் நினைவூட்டுகிறேன். எந்த பாஜக எம்எல்ஏவாவது மீண்டும் அதே வார்த்தைகளைக் உதிர்த்தால், நான் உங்கள் வாயில் ஆசிட் ஊற்றி எரிப்பேன்” என அவர் கூறினார்.
அவரது இந்த பேச்சுக்கு பாஜக தரப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.