Monday, March 31, 2025

யப்பா சாமி! ‘எங்கள’ விட்ருங்க ப்ளீஸ் கொல்கத்தாவை விட்டு ‘வெளியேறும்’ KKR?

நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதல் போட்டியில், தோல்வியைத் தழுவியதற்கான காரணம் தற்போது தெரிய வந்துள்ளது. IPL தொடரினை பொறுத்தவரை ஒவ்வொரு அணிக்கும் Home Ground உண்டு.

சென்னைக்கு சேப்பாக்கம், பெங்களூருக்கு சின்னச்சாமி போல கொல்கத்தா அணிக்கு, ஈடன் கார்டன் உள்ளது. ஒவ்வொரு அணியும் சொந்த மைதானத்தில் போட்டி நடைபெறும்போது, தங்களுக்கு ஏற்றாற்போல Pitchஐ வடிவமைத்துக் கொள்ளலாம்.

Pitch வடிவமைப்பு, மைதான பராமரிப்பு ஆகியவற்றுக்கு அணிகள் தான் பணம் செலுத்துகின்றன. இதனால் மேற்கண்ட சலுகை அணிகளுக்கு உள்ளது. இதில்தான் தற்போது கொல்கத்தா அணிக்கு சிக்கல் எழுந்துள்ளது.

ஈடன் கார்டன் மைதானத்தின் Pitchஐ Spinக்கு சாதகமாக வடிவமைக்க, கேப்டன் அஜிங்கியா ரஹானே கேட்டுக் கொண்டாராம்.

ஆனால் Pitch வடிவமைப்பாளர் சுஜன் முகர்ஜி அவ்வாறு செய்ய மறுத்துள்ளார். இதுதான் கொல்கத்தாவின் தோல்விக்குக் காரணமாகி விட்டது. இதுகுறித்து KKR அறிக்கை கேட்டபோது, ”Pitch இயற்கையாக எப்படி செயல்படுமோ, அதன்படிதான் வடிவமைத்தேன். வேறு மாதிரி வடிவமைக்க முடியாது,” என்று தெரிவித்து இருக்கிறார்.

அவரின் இந்த செயல் தற்போது கடும் விவாதங்களுக்கு உள்ளாகி இருக்கிறது. இதனால் KKR அணி கொல்கத்தாவை விட்டு வெளியேறி, வேறு ஒரு Home Groundஐ தேர்வு செய்யும் முடிவில் இருக்கிறார்களாம். இதுகுறித்து கிரிக்கெட் விமர்சகர் ஹர்ஷா போக்லே, ”ஒரு பிட்சின் வடிவமைப்பாளர், ஹோம் கிரௌண்ட் அணி கூறுவதுபோல்தான் பிட்சை வடிவமைக்க வேண்டும். அவர் மறுக்கக்கூடாது.

அப்படி மறுத்தால், அல்லது Pitch ஸ்பின்னர்களுக்கு சாதகமாக இல்லையென்றால், KKR தங்களுக்கு தேவையானதுபோல் வேறு நகரத்தின் Pitchஐ தான் தேர்வு செய்ய வேண்டும். எனக்கு தெரிந்து, ஒரு பிட்சை நமக்கு தேவையானதுபோல், கிட்டத்தட்ட 80 சதவீதத்திற்கு மேலும் மாற்ற முடியும்,” என்று தெரிவித்து உள்ளார்.

முதல் போட்டியில் தோல்வியைத் தழுவினாலும், 2வது போட்டியில் KKR மீண்டும் வெற்றிப்பாதைக்குத் திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest news