பூமியைப் பாதிக்குமா பேன்டி, ஜட்டி?

456
Advertisement

நாம் உடுத்திய உள்ளாடைகளை சர்வசாதாரணமாக குப்பைத் தொட்டியில்
வீசியெறிந்துவிட்டுப் போய்க்கிட்டே இருப்போம். ஆனால், சுவிட்சர்லாந்து நாடு
இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி இன்ட்ரஸ்ட்டிங்கான ஆய்வு ஒன்றை
மேற்கொண்டுள்ளது.

எப்படித் தெரியுமா…?

ஒவ்வொருவரும் தாங்கள் உடுத்திய காட்டன் பேன்டி, காட்டன் ஜட்டிகளைப் தூக்கி
வீசியெறிந்துவிடாமல், நிலத்துக்குள் புதைத்து அதனால், நிலத்தில் ஏற்படும் மாற்றங்களை
அறிய விரும்பியது அந்நாட்டின் சூரிச் பல்கலைக்கழகமும் AGROSCOPE ஆராய்ச்சி
நிறுவனமும்.

இதற்காக அந்நாட்டு மக்களிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தன. அதாவது, அவரவர்
உடுத்திய ஜட்டி, பேன்டி போன்ற உள்ளாடைகளை மண்ணில் புதைக்க வேண்டுகோள்
விடுத்தன.

இந்த வேண்டுகோளை அங்குள்ள ஆயிரம்பேர் ஏற்றனர். இதைத் தொடர்ந்து
தாங்கள் உடுத்திவந்த உள்ளாடைகளைக் கடந்த ஏப்ரல் மாதம் மண்ணுக்குள்
புதைத்தனர்.

அதன்படி, ஒவ்வொருவரும் தலா இரண்டு ஜோடி ஜட்டி, பேன்டி வீதம் என்று
மொத்தம் 2 ஆயிரம் உள்ளாடைகள் அவரவர் வீட்டுத்தோட்டத்தில் பூமிக்குள்
புதைக்கப்பட்டது.

அப்படி பூமிக்குள் புதைக்கப்பட்ட உள்ளாடைகள் இரண்டு அல்லது மூன்று
மாதங்கள் கழித்து மீண்டும் தோண்டி எடுக்கப்படவுள்ளது.

சரி, எதற்காக இந்த விந்தையான ஆய்வு தெரியுமா…?

நிலத்துக்குள் புதைக்கப்பட்ட இந்த உள்ளாடைகள் எந்தளவுக்கு மட்கிப்போயுள்ளது,
அவற்றை மட்கச்செய்த பாக்டீரியா எது என்பது போன்ற விவரங்களை அறிந்துகொள்ளப்
போகிறார்களாம்.

அப்புறம்…

ஜட்டி, பேன்டிகளைப் புதைத்த மண்ணின் தன்மை எந்தளவுக்கு உள்ளது
என்பதை அறிந்து அதன்பின்னர் இதுபோன்ற பொருட்களால் பாதிக்காத
வண்ணம் மண்ணைக் காப்பது எப்படி என்பதைக் கண்டறிய உள்ளார்களாம்.