Wednesday, January 7, 2026

URL-ஐ ‘மாற்றிய’ கூகுள் ‘இந்திய’ பயனர்களை பாதிக்குமா?

இணையத்தில் தகவல்களைத் தேட தேடுபொறியாகப் பயன்படும் கூகுள், இணைய உலகின் ராஜாவாகத் திகழ்கிறது. எத்தனையோ தேடுபொறிகள் வந்தாலும் கூட, கூகுளின் மீதான மோகம் கொஞ்சமும் குறையவில்லை. இதனால் கூகுளை செல்லமாக கூகுள் ஆண்டவர் என்று மக்கள் அழைக்கின்றனர்.

உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் கூகுள், ஏப்ரல் 15ம் தேதி Latest அப்டேட் ஒன்றை மேற்கொண்டுள்ளது. முன்னதாக நீங்கள் கூகுளை பயன்படுத்தும்போது எந்த நாட்டில் இருக்கிறீர்களோ, அந்த நாட்டின் சுருக்கமான பெயரும் சேர்ந்து, கூகுள் URLலில் வரும்.

உதாரணமாக இந்தியாவில் நீங்கள் கூகுளை பயன்படுத்தினால் google.in என்றும், பிரேசில் நாட்டில் பயன்படுத்தினால் google.com.br என்றும் URL வரும். இதைத்தான் தற்போது கூகுள் நீக்கியுள்ளது. இதனால் கூகுளில் இனிமேல் நீங்கள் தகவல்களை தேடும்போது, Google.Com என்று மட்டுமே URL வரும்.

இதுகுறித்து கூகுள், ”இந்த மாற்றம் பயனர்களை எந்த விதத்திலும் பாதிக்காது. நாட்டின் பெயரிலான Domainகள் தேவையில்லை என்பதால், இந்த மாற்றத்தை மேற்கொண்டோம்,” என்று, விளக்கம் அளித்துள்ளது.

Related News

Latest News