Monday, March 31, 2025

கை ரேகை பதிக்காவிட்டால் இனி கேஸ் சிலிண்டர் நிறுத்தப்படுமா? ஏப்ரல் 1 முதல் புதிய ரூல் வருதா? LPG நிறுவனங்களின் அதிரடி விளக்கம்!

கை ரேகை பதித்தால் தான் இனி கேஸ் சிலிண்டர் கிடைக்கும் எனவும் ஏப்ரல் 1 முதல் இந்த புதிய விதி நடைமுறைப்படுத்தப்படவிருப்பதாகவும் பல செய்திகள் திசைக்கு ஒன்றாக முளைத்து பரவி வருகின்றன.

இந்நிலையில் ஆதார் சரிபார்ப்பிற்காக கை ரேகை பதியாவிட்டாலும் கேஸ் சிலிண்டர் கிடைக்கும் என்று LPG நிறுவனங்கள் விளக்கமளித்துள்ளன. மேலும் ஏப்ரல் 1 முதல் கைரேகை பெறப்பட்டாலும் கை ரேகை இல்லாவிட்டாலும் தொடர்ந்து சிலிண்டர் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது மக்களுக்கு நிம்மதியை தரும் செய்தியாக இருக்கிறது.

கடந்த சில மாதங்களாக LPGசிலிண்டர் நுகர்வோரின் பயோமெட்ரிக் சான்றுகளின் அங்கீகாரம் நுகர்வோரின் வீட்டு வாசலிலேயே செய்யப்பட்டு வருகிறது, 70% முதல் 80% வரை டெலிவரி பணியாளர்களுக்கு பயோமெட்ரிக் அங்கீகார சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் நேரடியாக வீடுகளில் வந்து சிலிண்டர் வழங்கும் போதே நுகர்வோரின் பயோமெட்ரிக் சான்றுகளின் அங்கீகாரத்துக்கான சோதனை நடக்கிறது. மேலும், எல்பிஜி சிலிண்டர்களை வீட்டு வாசலில் டெலிவரி செய்யும் போது டெலிவரி செய்பவர்கள் உங்கள் பயோமெட்ரிக்கை சோதனை செய்து ஆதார் விவரங்கள் உங்களுடையது தானா என்பதை Check செய்வார்கள்.

முக்கியமாக மானியத்துடன் கூடிய LPGயைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களால் வழங்கப்பட்ட ஆதாரை அங்கீகரிப்பதற்காக மட்டுமே இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது எனவும் வாடிக்கையாளர்கள் ஒத்துழைத்து தங்கள் பயோமெட்ரிக் அங்கீகாரத்தைப் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் எனவும் சிலிண்டர் நிறுவனங்கள் விளக்கமளித்துள்ளன.

Latest news