சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தி, வெற்றியை பறித்ததற்கு இளம்வீரர் ஒருவரின் பங்கும் முக்கியமானது. அவர்குறித்து இங்கே பார்க்கலாம்.
CSK வரலாற்றில் முதன்முறையாக 20 வயது இளம்வீரர் ஒருவரை, ஓபனராக இறக்கி விட்டுள்ளனர். லக்னோ பவுலர்களை லெப்ட் ஹேண்டில் டீல் செய்த அந்த வீரரின் பெயர் Shaik Rasheed. ஆந்திராவின் குண்டூர் பகுதியை சேர்ந்த Rasheed உள்ளூர் கிரிக்கெட்டில் அதிரடி காட்டி, இந்திய அணியின் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான 2022 அணியில் இடம் பிடித்தவர்.
துணை கேப்டனாக U-19 கோப்பையை வென்றதால், Rasheed மீது புகழ் வெளிச்சம் விழுந்தது. இதையடுத்து சென்னை அவரை ஏலத்தில் எடுத்து அணியில் சேர்த்துக் கொண்டது. 2023ம் ஆண்டில் இருந்தே, Rasheed CSKவில் இடம்பெற்று வருகிறார்.
அண்மையில் நடைபெற்ற மெகா ஏலத்தில், 30 லட்சம் ரூபாய்க்கு சென்னையால் எடுக்கப்பட்டார். ருதுராஜ் விலகியது, பேட்டிங் சொதப்பல்கள், இளம்வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதில்லை போன்ற விமர்சனங்களால், Rasheedக்கு ஆடும் லெவனில் இடம் கிடைத்தது.
கிடைத்த கேப்பில் பட்டாசு கொளுத்திய Rasheed,19 பந்தில் 27 ரன்களை அடித்து அசத்தினார். இதனால் மும்பைக்கு எதிரான போட்டியிலும் அவர் இடம்பெற வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ருதுராஜ்க்கு பதிலாக எடுக்கப்பட்ட ஆயுஷ் மத்ரே, ரச்சின் ரவீந்திராவுடன் ஓபனராக இறங்க உள்ளாராம்.
எனவே Rasheed ஒன் டவுனில் இறங்குவார் என தெரிகிறது. இந்த 20 வயது இளம்வீரர் மீது கேப்டன் தோனி, மிகவும் நம்பிக்கை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.