Friday, December 27, 2024

என் தலையை துண்டித்து கொள்வேன் – கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி ஆவேச பேச்சி

கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த  ரிது ராஜ் அவஸ்தி ஓய்வையொட்டி பெங்களூர் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் பிரிவு உபச்சார விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.இந்த விழாவில் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள் உள்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.

அப்போது பேசிய  அவஸ்தி,  “நாட்டின் சிறந்த உயர்நீதிமன்றங்களில் ஒன்று கர்நாடகா உயர்நீதிமன்றம். வேற்றுமையில் ஒற்றுமையை கண்டுள்ளேன். இதனால், ‘ஒரே மாநிலம், பல நாடுகள்’ என்ற முழக்கம் இங்கு பொருந்தும்” என குறிப்பிட்டு பேசினார்.

அதையடுத்து பேசிய மூத்த நீதிபதி பி. வீரப்பா ,  ‛‛நீதிமன்ற நடவடிக்கைகளின் போது அவதூறாகவும், ஆதாரமற்ற வகையிலும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் செயல்படுவதாக வழக்கறிஞர்கள்  கூறியதாக தகவல்கள் வெளியாகின்றன. நீதிபதியாக நான் தவறு செய்தால் கர்நாடக உயர்நீதிமன்றம் முன்பு நின்று, நானே என் தலையை துண்டித்து கொள்கிறேன்.

நீதிபதிகள் மீது வழக்கறிஞர்கள் முன்வைக்கும்பொது   ஆதாரமாற்ற குற்றச்சாட்டுகளை வழக்கறிஞர்கள் சங்கம் நீதித்துறையை காப்பாற்ற முன்வர வேண்டும். ஏனென்றால் இதுபோன்ற நடத்தைகளை ஓரளவு பொறுத்து கொள்ள முடியும். ஆனால் வரம்பு மீறும்போது விஷ்ணுவின் ஆயுதத்தை  பயன்படுத்துவதை தவிர வேறு வழியில்லை” என்றார்.

இந்நிகழ்ச்சியில்  மூத்த நீதிபதி பி. வீரப்பா, அட்வகேட் ஜெனரல் பிரபுலிங்க நவதாகி உள்ளிட்ட பல நீதிபதிகள், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எம்.பி. நரகுண்டா, உதவி சொலிசிட்டர் ஜெனரல் எச். சாந்திபூஷன், பெங்களூரு வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் விவேக் சுப்பாரெட்டி, மத்திய, மாநில அரசு வழக்கறிஞர்கள், நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Latest news