உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த அக்டோபர் 4ம் தேதி சீதாபூர் மாவட்ட கலெக்டர் அபிஷேக் ஆனந்த் முன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. அப்போது மெராஜ் என்பவர் ஒரு வித்தியாசமான கோரிக்கையை கலெக்டரிடம் முன் வைத்தார். இதை பார்த்த அதிகாரிகள் திகைத்து போயினர்.
அந்த புகாரில், தனது மனைவி நசிமுன் இரவு நேரத்தில் நாகினி போல் மாறி உஷ்.. உஷ்.. என்று சத்தம் போட்டு என்னை பயமுறுத்தி வருகிறார். இதனால் என்னால் இரவில் நிம்மதியாக கூட தூங்க முடியவில்லை. உள்ளூர் போலீசார் இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்க தவறிவிட்டதாகவும் உதவிக்காக மாவட்ட நிர்வாகத்தை அணுக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.
இதையடுத்து இந்த விஷயத்தை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.