திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த தம்பதி பார்த்திபன் – அம்சவள்ளி. 11 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்ட இருவரும், கிருஷ்ணகிரி மாவட்டம் தேர்ப்பேட்டை பச்சைக்குளம் பகுதியில் வசித்து வந்தனர்.
இந்நிலையில், மனைவி தகாத உறவில் இருந்து வருவதை அறிந்து ஆத்திரமடைந்த பார்த்திபன், மதுபோதைக்கு அடிமையாகி, தினமும் மனைவியை அடித்து சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இதில், கணவனை புடவையால் கழுத்தை நெரித்துக் கொன்ற அம்சவள்ளி, தூக்கிட்டு தற்கொலை செய்ததுபோல் நாடகமாடியுள்ளார். இந்த பரபரப்பு சம்பவத்தில் அம்சவள்ளியை கைது செய்திருக்கும் போலீசார், அவரின் தகாத உறவு காதலனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
