Tuesday, July 29, 2025

வீட்டில் நிர்வாணமாக சிதைந்து கிடந்த மனைவி.. சென்னை அருகே அதிர்ச்சி!! நடந்தது என்ன?

காஞ்சிபுரம் அடுத்த திம்மசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த அஸ்வினி என்பவர் தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். கடந்த 24ஆம் தேதி காலை 11 மணியளவில், அவரது கணவர் மற்றும் குழந்தைகள் வெளியே சென்றிருந்த நிலையில், அஸ்வினி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அடையாளம் தெரியாத இரண்டு மர்ம நபர்கள் திடீரென வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.

அப்போது, மர்ம நபர்கள் அஸ்வினியை சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த கொலைவெறித் தாக்குதலில் அஸ்வினிக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. தாக்குதலுக்குப் பிறகு, மர்ம நபர்கள் உடனடியாக அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த அஸ்வினியை மீட்டு, உடனடியாக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். வீட்டில் இருந்த பொருட்களை கொள்ளையடிக்கும் நோக்கில் வந்த மர்ம நபர்கள், அதற்கு தடையாக இருந்ததால் அஸ்வினி மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பூட்டை உடைத்து கொல்லையில் ஈடுபட்ட நபர்கள் திருடி சென்ற பொருட்கள் 8 சவரன் நகை 75,000 பணம் வெள்ளிப் பொருட்கள் கொள்ளை போய் உள்ளது.மேலும் பெண் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பியோடிய மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதற்கிடையே மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு மருத்துவமனையில் இறந்த நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனை நன்றி பலியானார்,
பெண்ணின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் பொன்னேரிகரை காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது .

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News