ஆந்திர மாநிலம் மங்களகிரி பகுதியில் வசித்து வந்தவர் ஷேக் அகமது (27). திருமணமான இவருக்கு கிராந்தி (25) என்ற மனைவி உள்ளார். இவர்களின் திருமணத்திற்கு எட்டு மாதங்களே ஆன நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
சம்பவத்தன்று, வீட்டில் கிராந்தி டிவியை அதிக சத்தத்துடன் பார்த்துக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அதனால் டிவி சத்தத்தை குறைக்குமாறு ஷேக் அகமது கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதத்தின் போது ஆத்திரமடைந்த கிராந்தி, வீட்டில் இருந்த கத்தியை எடுத்து ஷேக் அகமதுவை குத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஷேக் அகமது உயிரிழந்தார்.
இதுகுறித்து ஷேக் அகமதுவின் உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் கிராந்தியை கைது செய்தனர். தற்போது அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
டிவி சத்தத்தை குறைக்கச் சொன்னதற்காக கணவனை மனைவி கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
