Wednesday, February 18, 2026

நான் சர்வதேச கைக்கூலியா? இவ்வளவு வன்மம் ஏன்? – பாலா விளக்கம்!

பாலா மற்றும் பாலாஜி சக்திவேல் நடிப்பில் அண்மையில் காந்தி கண்ணாடி திரைப்படம் வெளியானது. இப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

இந்நிலையில் பாலாவை சர்வதேச கைக்கூலி என பல விமர்சனம் செய்து வருகின்றனர். பாலா கொடுத்த ஆம்புலன்ஸ் நம்பர் பொய்யாக இருப்பதாகவும் அவர் பித்தலாட்டம் செய்து வருவதாகவும் செய்தியாளர் ஒருவர் தொடர்ந்து பாலா மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இந்த வீடியோ வைரலான நிலையில் பாலாவை தொடர்ந்து பலரும் விமர்சிக்க தொடங்கி வருகின்றனர். இது குறித்து பதில் அளித்து இருக்கும் KPY பாலா என்னை சர்வதேச கைக்கூலி என்று கூறுவது எனக்கே அதிர்ச்சியாக தான் உள்ளது. நான் வண்டி வாங்கி தருகிறேன் என்றால் அதை அவர்கள் பெயரில் மாற்றிக் கொள்வார்கள். அதற்காகத்தான் வண்டியின் நம்பரை மறைத்துக் கொடுக்கிறேன்.

நான் செய்த நிகழ்ச்சிகள், ப்ரோமோஷன், படங்களில் இருந்து வந்த வருமானத்தில் வைத்து தான் உதவிகள் செய்கிறேன். நான் செய்த உதவிகளுக்கெல்லாம் ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது என அவர் கூறியுள்ளார்.

Related News

Latest News