Wednesday, May 14, 2025

என்ன இப்படி நடத்துறது ‘புடிக்கல’ கேப்டனை ‘எதிர்த்த’ ரோஹித் சர்மா?

IPL தொடரில் அதிக தோல்விகளை பெற்று முதலிடம் பிடிப்பது யார்? என்ற போட்டி சென்னை, மும்பை, ஹைதராபாத் அணிகள் மத்தியில் நடந்தது. இதில் சென்னை, ஹைதராபாத் அணிகள் முதல் இரண்டு இடங்களில் உள்ளன.

மும்பை மட்டும் சுதாரித்துக் கொண்டு வெளியேறி விட்டது. சென்னைக்கு எதிரான வெற்றியால் நல்ல ரன்ரேட் உடன் Play Off ரேஸிலும் நீடிக்கிறது. பல மேட்ச்களாக பார்ம் இல்லாமல் தவித்து வந்த ரோஹித் சர்மாவை, மீண்டும் பார்முக்கு வரவைத்து சென்னை பவுலர்கள் சாதனை படைத்துள்ளனர்.

4 வெற்றி, 4 தோல்விகளுடன் மும்பை பாயிண்ட் டேபிளில் 6வது இடத்தில் உள்ளது. அடுத்து வரும் 6 போட்டிகளில் ஐந்தில் வென்றால் கூட Play Off சென்று விடலாம். இந்தநிலையில் மும்பை அணிக்குள் ஹர்திக் – ரோஹித் இடையே மீண்டும், மனக்கசப்புகள் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஹர்திக் தற்போது Impact வீரராக ரோஹித்தை பயன்படுத்தி வருகிறார். ஆனால் ரோஹித்திற்கு இது சுத்தமாக பிடிக்கவில்லையாம். இதுகுறித்து அவர், ”Impact வீரராக இறங்கி விளையாடும்போது ஆட்டத்தின் போக்கில் செல்லாமல், சட்டென உள்ளே வருவது போல உள்ளது.

இது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. என்றாலும் அணியின் நலன் கருதி இதை வேறு வழியில்லாமல் ஏற்றுக் கொள்கிறேன்,” என்று வருத்தம் தெரிவித்தாராம். ஹர்திக் கேப்டனாக பொறுப்பேற்றது முதலே மும்பை அணியில் முட்டலும், மோதலுமாகத் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Latest news