அம்பேத்கார் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அமித்ஷாவின் இந்த பேச்சுக்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அமித்ஷா பேச்சு குறித்து இதுவரை விஜய் கண்டிக்கவில்லை என விசிக துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு கூறியுள்ளார். அம்பேத்கரை அவமதித்த அமித்ஷாவுக்கு எதிரான போராட்டத்தில் அதிமுகவோ, பாமகவோ பங்கேற்கவில்லை; அம்பேத்கர் நூலை வெளியிட்ட தவெக தலைவர் விஜய் இதுவரை கண்டிக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.