சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்த 2025ம் ஆண்டு, மிகப்பெரும் சோதனையாக அமைந்து விட்டது. தொடர் தோல்விகளால் போட்டிக்கான டிக்கெட் விற்பனை வெகுவாக குறைந்துள்ளது. அந்த அளவுக்கு, ஆல் ஏரியாவிலும் சென்னை அடிவாங்கி வருகிறது.
இதற்குத் திறமையான வீரர்களை பெஞ்சில் அமர வைத்தது, நல்ல வீரர்களை ஏலத்தில் கோட்டை விட்டது, மூத்த வீரர்களை கண்மூடித்தனமாக நம்பியது என்று ஏகப்பட்ட காரணங்கள் உள்ளன. என்றாலும் இத்தனை தோல்விகளுக்கு பிறகும் கூட, அதிலிருந்து சென்னை பாடம் கற்றதாக தெரியவில்லை.
இந்தநிலையில் முன்னாள் வீரரும், கிரிக்கெட் வர்ணணையாளருமான ஆகாஷ் சோப்ரா, CSKவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து அவர், ”CSKவில் ஒரு சிலர் மட்டுமே தற்போது சிறப்பாக விளையாடி வருகின்றனர். ஆனால் அந்த தனி நபர்களின் ஆட்டத்தை வைத்து வெற்றி பெற முடியாது.
என்னை பொறுத்தவரை சாம் கரணை பெஞ்சில் அமர வைக்க வேண்டும். இதுவரை அவர் வெறும் 21 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். பவுலிங்கிலும் ஒரு விக்கெட்டினை கூட எடுக்கவில்லை. எனவே அவருக்குப் பதிலாக டெவன் கான்வே அல்லது அஸ்வின் இருவரில், ஒருவரை மீண்டும் பிளேயிங் லெவனுக்குள் கொண்டு வரலாம்,” இவ்வாறு காட்டமாக பேசியிருக்கிறார்.