சென்னையில் தூய்மை பணியாளர்களை சந்தித்து அவர்கள் போராட்டத்துக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆதரவு தெரிவித்தார்.
சில நாட்களுக்கு முன்பு எந்த கட்சியும் விஜயகாந்தின் புகைப்படத்தைப் பயன்படுத்தக் கூடாது என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருந்தார். அப்படி இருக்கையில் ஜெயலலிதா படத்தை பயன்படுத்தியது ஏன் என விளக்கம் அளித்துள்ளார்.
ஜெயலலிதா படத்தையும், என் படத்தையும் சேர்த்து எங்களது வாட்ஸ் அப் குரூப்பில் நிர்வாகிகள் படத்தை பகிர்ந்தனர். அந்த படத்தை சுதீஷ் அவரது சமூக வலைத்தள பக்கத்தில் போட்டு இருக்கிறார். அந்த பதிவு தான் வைரல் ஆகியிருக்கிறது. என்னை கேட்டால் நான் ஏற்கனவே சொன்னது தான். ஒரு சூரியன்.. ஒரு சந்திரன் தான்.. அதே மாதிரி ஒரு எம்ஜிஆர்.. ஒரு ஜெயலலிதா.. ஒரு கருணாநிதி.. ஒரு கேப்டன் தான்..
ஒருத்தருக்கு பதில் இன்னொருவர் வர முடியாது. ஜெயலலிதா இரும்பு பெண்மணி அவரை போல் யாரும் வர முடியாது. எவ்வளவோ சவால்களை சந்தித்து இருக்கிறார்.
அரசியலில் யாரை ரோல் மாடலாக எடுப்பீர்கள் என்று என்னிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு நான் இன்றைக்கு இரும்பு பெண்மணியாக.. அயர்ன் லேடியாக இருப்பவர் தான் என்னுடைய அரசியல் ரோல் மாடல் என்று கூறினேன்.. அதனால் தான் இன்று அது சோஷியல் மீடியாவில் வேகமாக பரவியுள்ளது. என கூறியுள்ளார்.