Tuesday, September 30, 2025

கோவை, மதுரை மெட்ரோ தாமதம் ஏன்? : ஆர்.டி.ஐ என்ன சொல்கிறது?

தமிழ்நாடு அரசு, கோயம்புத்தூர் மற்றும் மதுரை மெட்ரோ திட்டங்களுக்கான அறிக்கைகளை சுமார் 19 மாதங்களுக்கு முன்பு மத்திய அரசுக்கு சமர்ப்பித்தது. ஆனால், இந்த திட்டங்கள் இன்னும் ஒரு அடி கூட நகரவில்லை.

கோயம்புத்தூர் மெட்ரோ, அவினாசி மற்றும் சத்தியமங்கலம் சாலைகளில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல், மதுரையில் திருமங்கலம் மற்றும் ஒத்தக்கடை ஆகியவற்றை இணைக்கும் மதுரை மெட்ரோ திட்டத்தின் மதிப்பிடப்பட்ட செலவு ரூ. 11,368 கோடி ஆகும்.

தகவல் அறியும் உரிமைச் சட்டம்

சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர், தாக்கல் செய்த RTI மனு மூலம் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இந்த திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கைகள் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்திடம் ஆரம்பகட்ட பரிசீலனையில் இருப்பதாக RTI பதில் தெரிவிக்கிறது. இந்த தாமதம், திட்டச் செலவுகளை அதிகரிக்கலாம் என்றும், வெளிநாட்டு நிதியைப் பெறுவதில் சிக்கல்களை உருவாக்கலாம் என்றும் ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News