விஜய் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் ஈரோடு மாவட்டத்தில் நாளை (17-12-2025) பெருந்துறை அருகே விஜயமங்கலம் சரளை பகுதியில் உள்ள மைதானத்தில் நடக்கிறது. பிரசார கூட்டத்தையொட்டி 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
இதனை கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் ஈரோடு வந்து கூட்ட ஏற்பாடுகளை கவனித்து வருகிறார். இதனிடையே என். ஆனந்த் கோபி பச்சைமலை முருகன் கோவிலுக்கு நேற்று சென்றார். அப்போது அவருக்கு பரிவட்டம் கட்டி மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
முன்னதாக ஈரோட்டிற்கு வந்த தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்திற்கு யார் முதலில் மாலை போடுவது என்பதில் தர்மபுரி – ஈரோடு மாவட்ட தவெக நிர்வாகிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து என்.ஆனந்த் உடனே இரு தரப்பினரையும் அழைத்து சமாதானம் செய்தார்.
