டெல்லியில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக 48 இடங்களை கைப்பற்றி முன்னிலையில் உள்ளது. ஆம் ஆத்மி 22 இடங்களில் மட்டுமே பெற்றுள்ளது.
டெல்லியில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாஜக அலுவலகங்களில் தொண்டர்கள் இனிப்புகளை வழங்கி கொண்டாடத் தொடங்கியுள்ளனர். புதுடெல்லி தொகுதியில் கெஜ்ரிவாலை வீழ்த்திய பர்வேஷ் முதல்வராக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.