Monday, March 31, 2025

யாரு சாமி நீ? ‘மேட்ச்ல’ எந்த Team ‘ஜெயிப்பாங்கன்னு’ புட்டுப்புட்டு வச்சுருக்க!

ஆளுக்கு 5 கோப்பைகளை வைத்திருக்கும், சென்னை-மும்பை இடையிலான போட்டி தான் மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் உண்மையான Rivalry சென்னை-பெங்களூரு இடையிலான போட்டியாகத் தான் இருக்க போகிறது.

கடந்த சீசனில் சென்னை அணியின் பிளே ஆப் கனவை தவிடு பொடியாக்கிய, பெங்களூரு இறுதிப்போட்டிக்கு முன்னேறாமல் வெளியேறியது. அதற்கு நிச்சயம் சென்னை பழி தீர்க்க பார்க்கும். என்றாலும் இந்த சீசனில் Thanos போல எக்கச்சக்க வலிமையுடன் RCB திகழ்கிறது.

சேப்பாக்கம் ஆடுகளம் சுழலுக்கு சாதகமாக இருப்பதால், Chasing Master கோலி வெறித்தனமாக பயிற்சி செய்து வருகிறார். சென்னையின் மிடில் ஆர்டர் ரொம்பவே சொதப்பலாக இருப்பதால், பெங்களூர் – சென்னை போட்டி இறுதிவரை வெற்றி வாய்ப்பை கணிக்க முடியாமல் தான் இருக்க போகிறது.

இந்தநிலையில் இந்த 2025ம் ஆண்டு IPL தொடரின் ஒவ்வொரு போட்டியிலும், எந்த அணி ஜெயிக்கும்? என வெறித்தன ரசிகர் ஒருவரின் Prediction, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதில் மிகப்பெரும் Twist ஆக சென்னை-பெங்களூரு இடையிலான போட்டியில், RCBயே ஜெயிக்கும் என்று கணித்துள்ளார். இதனால் சென்னை ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். இதுவரையிலான ஆட்டங்களில் அவரின் கணிப்பு 100 சதவீதம் நிஜமாகி இருக்கிறது என்பது தான், ரசிகர்களின் இந்த வருத்தத்திற்குக் காரணம்.

பெங்களூரை அடக்கி இந்த Prediction எல்லாம் சும்மா பாஸ், என்பதை நம்ம சென்னை நிரூபிக்குமா? பொறுத்திருந்து பார்க்கலாம்.

Latest news