சண்டையை தொடங்கியது விஜய் ரசிகர்களா? அஜித் ரசிகர்களா? இதோ ஒரு குறும்படம்!

179
Advertisement

எட்டு ஆண்டுகளுக்கு பிறகு ஒரே நாளில் ரிலீஸ் ஆன விஜய் அஜித் படங்கள் ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை மட்டும் அல்ல, பிரச்சினைகளையும் கூடவே கூட்டி வந்தது என்றே சொல்லலாம்.

முதல் காட்சி கொண்டாட்டத்தின் போது அஜித் ரசிகர் மரணம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்த, ரோகினி தியேட்டரில் நடந்த banner கிழிப்பு சம்பவம் பரபரப்பான சூழலை ஏற்படுத்தியுள்ளது.

இருதரப்பு ரசிகர்களும் சரமாரியாக banner கிழிப்பில் ஈடுபட்டாலும், இந்த மோதலை தொடங்கியது யார் என்ற கேள்வி எழுந்து வந்தது. இந்நிலையில், விஜய் banner தான் முதலில் கிழிக்கப்பட்டது எனவும் அதற்கான ஆதாரம் என பகிரப்பட்டுள்ள  வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

முதல் காட்சிக்காக இரு நடிகர்களின் bannerகளும் முந்தய தினமே வைக்கப்பட்டு இருந்த நிலையில், 1 மணிக்கு துணிவு பார்க்க வந்த அஜித் ரசிகர்களே விஜய் bannerஐ முதலில் கிழித்ததாகவும், 4 மணி காட்சியில் வாரிசு பார்க்க வந்த விஜய் ரசிகர்கள் பதிலுக்கு அஜித் bannerஐ கிழித்ததாகவும் கூறப்படுகிறது.

எது எப்படியோ, இரு தரப்பு ரசிகர்களும் மோதல் போக்கை கைவிட்டால் மட்டுமே, இது போன்ற பிரச்சினைகளை தவிர்க்க முடியும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.