ஜிம்மிற்கு சென்று உடல் எடையை குறைப்பது நல்லது தான் என்றாலும், ஒரு சிலர்,ஜிம் பக்கமே திரும்பி பார்க்க கூடாதாம். அவர்கள் யார் தெரியுமா?
இருதயக் கோளாறு உள்ளவர்கள், இருதய அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள் ஜிம்மில் அதிகப்படியான உடற்பயிற்சி செய்வதை தவிர்க்க வேண்டும்.
ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் ஜிம்மிற்கு செல்வதை தவிர்க்க வேண்டும். அப்படியே சென்றாலும் அதிகப்படியான உடற்பயிற்சிகளை அவர்கள் மேற்கொள்ளக்கூடாது.
Also Read : பேப்பர் கப்களில் டீ, காபி குடிப்பது உடலுக்கு நல்லதா?
சமீபத்தில் ஏதேனும் அறுவை சிகிச்சை மேற்கொண்டார்கள் ஜிம்மிற்கு செல்வதை தவிர்க்க வேண்டும். உடல் நிலை சீரான பிறகு மருத்துவர் ஆலோசனைப்படி செல்ல வேண்டும்.
குடிக்கு அல்லது போதைப் பொருட்களுக்கு அடிமையாக இருப்பவர்கள் ஜிம்முக்கு செல்லக்கூடாது. அதேபோல 16 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர்கள் அல்லது சிறுமிகள் பெரியவர்களின் ட்ரெயினிங் இல்லாமல் ஜிம்மிற்கு செல்லக்கூடாது.