மாம்பழத்தை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது; அது ஏன்னு தெரியுமா?

தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும் முக்கனிகள் மா, பலா, வாழை.. அதிலும் மாம்பழம் முக்கியமான ஒன்று ஆகும். மாம்பழம்’பழங்களின் ராஜா’ என்று அழைக்கப்படுகிறது.. இதற்கு காரணம் அதன் சுவை, ஆரோக்கியம் மற்றும் பல நன்மைகள். மாம்பழம் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளை அதிகம் கொண்டுள்ளது, மேலும் இது இந்திய கலாச்சாரத்தில் ஒரு முக்கிய பழமாக பார்க்கப்படுகிறது.

வெப்ப மண்டலங்களில் பயிராகி, குளிர் பிரதேசங்களில் இருக்கும் மக்களை கூட கவர்ந்து இழுக்கும் பழம் என்றால் அது மாம்பழம் தான்…

வேறு எந்த பழத்திலும் இல்லாத இனிப்பு மற்றும் மணம் மாம்பழத்தில் உள்ளது. அதுமட்டுமின்றி, வைட்டமின் A, B, C மற்றும் E என பல ஊட்டச்சத்துக்களால் நிரம்பி காணப்படுகிறது.

மாம்பழம் உண்பதால் இதயம் நன்கு இயங்கும், கண் பார்வை தெளிவாகும், தோலில் ஏற்படும் சுருக்கங்கள் மறையும் என்கின்றனர், இதில் காணப்படும் மாங்கிபெரின் எனப்படும் ஒரு வகை பாலிபீனால் இதயத்தில் ஏற்படும் வீக்கத்தை தடுக்கிறது என்று மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மாம்பழம் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.மாம்பழத்தில் காணப்படும் நார்ச்சத்து செரிமான திறனை அதிகரிக்க உதவுகிறது.இது தவிர, மாம்பழத்தில் அமைந்துள்ள பீட்டா கரோட்டின் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும் என்கின்றனர்..


சரி மாம்பழம் சாப்பிடுவதற்கு ஏதேனும் அளவு இருக்கிறதா?

ஆமா இருக்கிறது.. அதாவது “அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு” என்ற பழமொழியை நாம் அறிந்திருப்போம்.. என்னதான் மருந்தாகவே இருந்தலும் அளவுடன் சாப்பிடுவது நல்லது என்கின்றனர் வல்லுநர்கள்.. அதாவது மாம்பழம் சாப்பிடும் அளவு மிதமாக இருக்க வேண்டும். ஒரு நாளைக்கு 100-150 கிராம் மாம்பழம் சாப்பிடலாம். அல்லது, ஒரு நாளைக்கு மூன்று முறை 50 கிராம் மாம்பழம் சாப்பிடலாம். குறிப்பதாக மாம்பழத்தில் சர்க்கரை அதிகம் இருப்பதால், சர்க்கரை நோயாளிகள் அதிகளவு மாம்பழம் சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவு உயரும் அது மட்டுமின்றி இந்த பழத்தில் கலோரி அதிகம் இருப்பதால், அதிகளவு சாப்பிட்டால் உடல் எடை கூடும் என்கின்றனர்.

குறிப்பாக உங்களது உணவில் ஏதேனும் மாற்றம் கொண்டுவர நினைத்தால் தகுந்த மருத்துவரின் ஆலோசனையோடு மாற்றுவது சிறப்பாகும்..

Latest news