கோலிவுட்டில் நம்பர் ஒன் விஜயா? அஜித்தா? த்ரிஷா யாரு பக்கம்?

161
Advertisement

‘வாரிசு’ பட ரிலீசுக்கான வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், படத்தின் தயாரிப்பாளரான தில் ராஜு தமிழகத்தில் விஜய் தான் நம்பர் ஒன் ஸ்டார் என்ற கருத்தை பதிவு செய்திருந்தார்.

இந்த கருத்தை திரை பிரபலங்கள் நடுநிலையாக கடந்து போனாலும், அஜித் ரசிகர்களை சற்றே கோபமடைய செய்ததை சமூகவலைதளங்களில் காண முடிந்தது.

அதே நேரத்தில், விஜய் ரசிகர்கள் எப்போதும் இல்லாத அளவிற்கு விஜயை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட த்ரிஷாவிடம் இந்த கேள்வி எழுப்பப்பட்டது.

அப்போது, நம்பர் ஒன் positionஐ வசூலை வைத்து மட்டுமே நிர்ணயிக்க முடியாது என கூறிய அவர், இருவருமே சரிசமமான நட்சத்திர அந்தஸ்தில் இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்தில் த்ரிஷாவின் கடைசிப் படமாக டிசம்பர் 30ஆம் தேதி ‘ராங்கி’ வெளியாக உள்ள நிலையில், படத்தில் 15 வருடத்திற்கு பிறகு விஜயுடன் இணைந்து த்ரிஷா நடிக்கும் படமாக ‘தளபதி 67’ அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது.