ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது : கொள்கை மீது விருப்பம் உள்ளவர்கள் எனது கட்சியில் பயணிப்பார்கள். முரண்பாடு உள்ளவர்கள் மாறி செல்கின்றனர். செல்வது அவர்கள் சொந்த விருப்பம். எந்த இலையும் உதிரும்போது அமைதியாக விழாது. வெளியே போகிறவர்கள் நான் நன்றாக செயல்படுகிறேன் என்று சொல்லி விட்டுப் போக மாட்டார்கள்.
யார் கையிலும் காலிலும் விழுந்து தக்க வைக்க வேண்டிய அவசியம் நாம் தமிழர் கட்சிக்கு இல்லை என அவர் கூறியுள்ளார்.