ஒரு கோடி ரூபாய்க்கு ஏலம் போன விஸ்கி

219
Advertisement

ஒரு கோடி ரூபாய்க்கு ஏலம்போன உலகின் மிகப்பழமையான
விஸ்கி பற்றிய விவரம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஒரு பாட்டில் மது 2 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்ட காலத்தில்
அதன் அசல் விலையைவிட ஆறுமடங்கு அதாவது, ஒரு லட்சத்து
37 ஆயிரம் டாலருக்கு விற்பனையாகி தற்போது சாதனை படைத்துள்ளது.

இது இந்திய மதிப்பில் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகம்.
250 வருடங்கள் பழமையானது இந்த விஸ்கி.

Advertisement

அமெரிக்காவின் Engledew வகை விஸ்கியான இந்த மதுபானம்
1860 ஆம் ஆண்டில் பாட்டிலில் நிரப்பப்பட்டுள்ளது. பாட்டிலில் அடைக்கும்
முன்பே இந்த விஸ்கி மிகவும் பழமையானதாக இருந்ததாகக்
கூறப்படுகிறது.

இந்த விஸ்கி அந்தக் காலத்தில் புகழ்பெற்ற பணக்காரர் ஒருவரால்
தயாரிக்கப்பட்டது.

1762- 1802 ஆண்டுகளுக்கிடைப்பட்ட காலத்தில் இந்த மது தயாரிக்கப்பட்டிருக்கலாம்
என்று தற்போது ஜார்ஜியா பல்கலைக் கழகம் ஆய்வுசெய்து கூறியுள்ளது.

இந்த விஸ்கியை அப்போதைய புகழ்பெற்ற அரசியல்வாதிகளுக்கும், தனது
தூரத்து உறவினரான அப்போதைய அதிபராக இருந்த பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட்,
ஹாரி எஸ். ட்ருமன் ஆகியோருக்கும் 2 பாட்டில் பரிசளித்துள்ளனர் இந்த மதுபான தயாரிப்பாளர்கள்.