பிஆர் பாண்டியனை அழைத்து செல்லும் போது.. கூடவே வந்த நபர் செய்த செயலால் பரபரப்பு

திருவாரூர் மாவட்டம், விக்கிரப்பாண்டியம் பகுதியில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு எதிராக போராடிய பொழுது பொதுச்சொத்தை சேதப்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

இது சம்பந்தமான வழக்கு திருவாரூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், விவசாய சங்க தலைவர் பி ஆர் பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து அவரது வீட்டுக்கு விரைந்த போலீசார் பி ஆர் பாண்டியனை அழைத்து வந்தனர். வீட்டுக்குள் சென்ற போலீசார் அவரை வீட்டின் வெளியில் நின்ற வேனிற்கு அழைத்து வந்த போது உடன் அமைதியாக நடந்து வந்துகொண்டிருந்த அவரது ஆதரவாளர் ஒருவர் திடீரென கோஷம் எழுப்பினார்.

நீதி எங்கே.. நீதி எங்கே.. என வீட்டை விட்டு வெளியே வந்ததும் கோஷம் எழுப்பினார். அவரை தொடர்ந்து அவரது ஆதரவாளர்களும் கோஷம் எழுப்ப தொடங்கினர். அப்போது போலீசார் அவரது வாயை பொத்தி அங்கிருந்து அவரை தனியாக அழைத்து சென்றனர். இதையடுத்து பி ஆர் பாண்டியன் வேனில் அழைத்து செல்லப்பட்டார்.

Related News

Latest News