இந்தியாவில் 2025-ஆம் ஆண்டு இறுதிக்குள் INTERNET பயனாளர்கள் எண்ணிக்கை 90 கோடியைக் கடக்கும் என இந்திய இன்டர்நெட் மற்றும் மொபைல் அமைப்பின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளா மக்கள் தொகையில் 72 சதவீதம் பேர் INTERNET பயன்படுத்துவதாக, குறிப்பிடப்பட்டுள்ளது. தினமும் சராசரியாக 90 நிமிடங்களுக்கு INTERNET பயன்படுத்துவதாகவும், பயனாளர்களில் 53 சதவீதம் பேர் ஆண்கள், 47 சதவீதம் பேர் பெண்கள் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மற்றும் ஓடிடி தளங்களுக்காக அதிகம் பேர் INTERNET பயன்படுத்துவதாகவும் ஆன்லைன் படிப்புக்காக 3 சதவீதம் பேர் மட்டுமே INTERNET பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.