Thursday, September 4, 2025

ஜிஎஸ்டி வரி குறைப்பால் எந்தெந்த பொருட்களின் விலை குறையும்?

டெல்லியில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மிக முக்கிய எடுக்கப்பட்டுள்ளன. 4 அடுக்குகளாக இருந்த வரி விதிப்பு, தற்போது 2 அடுக்குகளாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை கணிசமாக குறையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் 4 அடுக்குகளாக இருந்த வரி விதிப்பு முறை, 2 அடுக்குகளாக குறைக்கப்பட்டன. இனி 5 மற்றும் 18 சதவீத அடுக்குகள் மட்டுமே நடைமுறையில் இருக்கும். ஜிஎஸ்டி வரி குறைப்பால் எந்தெந்த பொருட்களின் விலை குறையும், எந்தெந்த பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பதை பார்ப்போம்.

வரி விலக்கு பெறும் பொருட்கள்

பால், சென்னா, பனீர், ரொட்டி, பரோட்டா, பென்சில், அழிப்பான், ஷார்ப்னர், பேஸ்டல்கள், வரைப்படங்கள், நோட்டு புத்தகங்கள், புவி கோளம்

உயிர்காக்கும் 33 மருந்துகள், தனிநபர் ஆயுள் மற்றும் காப்பீடு பிரீமியம்

வரி மாறும் பொருட்கள் (5 சதவீதம்)

ஹேர் ஆயில், கழிவறை சோப்பு, சோப்பு பார்கள், ஷாம்புகள், பிரஷ், பேஸ்ட், சைக்கிள்கள், சமையலறை பாத்திரங்கள்

பால் பாட்டில்கள், நாப்கின், டயாபர், புஜ்ஜியா, பாஸ்தா, சாஸ்கள், உடனடி நூடுல்ஸ், சாக்லேட்டுகள், காபி, பதப்படுத்தப்பட்ட இறைச்சி, கார்ன் பிளக்ஸ், வெண்ணெய், நெய்

பாட்டில் குடிநீர், பழஜூஸ்கள், பிஸ்கட், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட தின்பண்டங்கள், சிலவகை காலணிகள், ஆடைகள், தையல் எந்திரம், குடைகள், உலர் பழங்கள், உறைந்த காய்கறிகள்

உரம், பூச்சிக்கொல்லி மருந்து, டிராக்டர், அறுவடை எந்திரம், உரம் தயாரிக்கும் எந்திரம்

தெர்மோமீட்டர், மருத்துவ தர ஆக்ஸிஜன், நோயறியும் கருவிகள், மூக்கு கண்ணாடிகள்

வரி மாறும் பொருட்கள் (18 சதவீதம்)

ஏ.சி. எந்திரங்கள், டி.வி.க்கள் (32″க்கு மேல்), மானிட்டர்கள், புரொஜெக்டர்கள், பாத்திரம் கழுவும் எந்திரங்கள், 350 சி.சி.க்கு உட்பட்ட மோட்டார் சைக்கிள்கள், 3 சக்கர வாகனகள், 1,200 சி.சி.க்கு உட்பட்ட பெட்ரோல், எல்பிஜி, சிஎன்ஜி கார்கள். 1,500 சி.சி.க்கு உட்பட்ட டீசல் & டீசல் ஹைபிரிட் கார்கள், சரக்கு போக்குவரத்திற்கான மோட்டார் வாகனங்கள்.

40% விரி விதிக்கப்பட்ட பொருட்கள்

சிகரெட், பான் மசாலா, குட்கா, கார்பனேற்ற குளிர்பானங்கள், பெரிய அளவிலான பிரீமியம் கார்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News