இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் ஒவ்வொருவருக்கும், ஹெல்மெட் மிக முக்கியமானது. தவறான ஹெல்மெட்களை தேர்ந்தெடுப்பது, உங்கள் உயிர் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும்.
ஹெல்மெட்டில் ஓப்பன் ஃபேஸ் மற்றும் முழு ஃபேஸ் (Full Face) என இரண்டு வகை உள்ளது. அதில் எது சிறந்த பாதுகாப்பை தரும் என்பதை இதில் பார்ப்போம்.
ஓப்பன் ஃபேஸ் ஹெல்மெட்
இந்த வகை ஹெல்மெட், முகத்தை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஹெல்மெட். சுவாசிக்க மற்றும் பேச எளிதாக உள்ளது. எடை குறைவாக இருப்பதால், ஸ்கூட்டர் பயனாளர்கள் மற்றும் குறைந்த வேகத்தில் சாலையில் செல்வோருக்கு இது மிகவும் வசதியாக உள்ளது. ஆனால், முகம் மற்றும் தாடை பகுதிகளில் பாதுகாப்பு குறைவாக இருப்பதால், விபத்துச் சூழ்நிலைகளில் பல், தாடை எலும்பு போன்றவை பாதிப்படைவது அதிகம்.
முழு ஃபேஸ் ஹெல்மெட்
முகம், தாடை உள்பட முழுமையாக தலையை மூடுகிறது. எந்தவொரு காயமும் நேராமல், விபத்துகளில் மேலும் பாதுகாப்பை வழங்குகிறது. சற்று கனமானதாக இருந்தாலும், பாதுகாப்பு கூடுதலாக இருப்பது இதன் சிறப்பம்சம்.
எது சிறந்தது?
முழு ஃபேஸ் ஹெல்மெட்டுகள் அதிக அளவிலான பாதுகாப்பை வழங்குவதால் நிபுணர்கள் அந்த வகையையே பரிந்துரை செய்கிறார்கள். உங்கள் தேவைக்கு ஏற்ப ஹெல்மெட்டைத் தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியம். எனவே, சிறந்த பாதுகாப்பை தரும் ஹெல்மெட்டை தேர்வு செய்யுங்கள்.