பல்வேறு விஷயங்களுக்கு ஆதார் நம்பர் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், உங்களுடைய அனுமதி இல்லாமல் அது பயன்படுத்தப்பட்டால் தேவையில்லாத சிக்கல் உருவாகும். எனவே, அவ்வப்போது உங்களுடைய தரவுகளை கண்காணிப்பது என்பது மிகவும் அவசியம்.
முதலில் UIDAI வெப்சைட்டிற்குச் சென்று அதில் ‘மை ஆதார்’ டேபின் கீழ் காணப்படும் ‘ஆதார் ஆதன்டிகேஷன் ஹிஸ்டரி சர்வீஸ்’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
இப்போது உங்களுடைய 12 இலக்க ஆதார் நம்பரை டைப் செய்துவிட்டு, கொடுக்கப்பட்டுள்ள கேப்சா குறியீட்டை என்டர் செய்யவும். பிறகு OTP பெறுவதற்கான கோரிக்கையை கிளிக் செய்யவும்.
பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரில் பெறப்பட்ட OTP-ஐ என்டர் செய்த பிறகு கடந்த 6 மாதங்களில் உங்களுடைய ஆதார் மூலமாக செய்யப்பட்ட அனைத்து சரிபார்ப்பு கோரிக்கைகளின் பட்டியலைக் காண்பீர்கள்.
அதில் தேதி, நேரம், என்ன மாதிரியான சரிபார்ப்பு முறை அதாவது பயோமெட்ரிக் அல்லது OTP மற்றும் கோரிக்கை விடுத்த ஏஜென்சியின் பெயர் போன்ற விவரங்கள் அடங்கி இருக்கும்.
உங்களுக்குத் தெரியாமல் அப்படியே ஏதேனும் சரிபார்ப்பு செயல்முறை நடைபெற்றிருந்தால் UIDAI அல்லது சம்பந்தப்பட்ட சேவை வழங்குனருக்குப் புகார் ஒன்றை பதிவு செய்யலாம்.