Wednesday, December 17, 2025

மகளிர் உரிமைத் தொகை 2-ம் கட்ட விரிவாக்கம் எப்போது? – வெளியான முக்கிய தகவல்

கலைஞர் உரிமை தொகை திட்டத்தில் முதல் கட்டமாக சுமார் 1 கோடியே 13 லட்சத்து 75 ஆயிரத்து 492 பயனாளிகளுக்கு ஒவ்வொரு மாதமும் 15-ந்தேதி மகளிரின் வங்கிக்கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் மேலும் விரிவுபடுத்தப்படும் என அறிவித்திருந்தார். இதில் விண்ணப்பித்தவர்களில் தகுதி வாய்ந்தவர்களுக்கு வரும் 12-ந்தேதி முதல் உரிமை தொகை வழங்கப்பட உள்ளது.

இதற்கான நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்க உள்ளது. மதியம் 3 மணிக்கு நடக்கும் இந்த நிகழ்ச்சிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.

Related News

Latest News