ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர், ஜோர்புரா கிராமத்தில் இரவு நேர குறை தீர்க்கும் முகாம் ஒன்றை நேற்று முன்தினம் நடத்தப்பட்டது. அப்போது அங்கு வந்த மங்கி லால் என்பவர் பங்கேற்று கலெக்டரிடம் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் ‘எனது வீட்டுக்கு செல்லும் பாதையை சிலர் ஆக்கிரமித்து கடந்த சில நாட்களாக அதில் விவசாயம் செய்துள்ளனர். இதனால் வீட்டுக்கு செல்லும் பாதை அடைக்கப்பட்டு இருக்கிறது. எனவே நான் வீட்டுக்கு சென்று வர ஹெலிகாப்டர் ஒன்றை வழங்க வேண்டும்’ என குறிப்பிட்டு இருந்தார்.
இதை பார்த்த மாவட்ட ஆட்சியருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. உடனே தாசில்தார் பத்ரிநாராயணனை அழைத்து, இந்த மனு மீது உடனடி நடவடிக்கை எடுக்க அவர் உத்தரவிட்டார். அதன்படி மங்கி லால் வீட்டுக்கு ஆய்வு செய்த தாசில்தார், ஆக்கிரமிப்பாளர்ளிடம் 3 நாட்களுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார். மேலும் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.