டெல்லியில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. இந்நிலையில் டெல்லி முதல்வரின் பதவியேற்பு விழா பிப்ரவரி 19 அல்லது 20 ஆம் தேதிகளில் நடைபெறும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Also Read : மணிப்பூர் மாநிலத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்
இது தொடர்பாக விவாதிக்க பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் பிற பாஜக உயர்மட்டத் தலைவர்கள் இடையே ஒரு சந்திப்பு விரைவில் நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.