மணிப்பூர் மாநிலத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2023 மே 3 ஆம் தேதி மைதேயி – குக்கி ஆகிய இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் பின்னர் கலவரமாக வெடித்தது. சுமார் 2 ஆண்டுகளாக நீடித்து வரும் இந்த கலவரத்தில் 200-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து மணிப்பூரில் நிலைமையை சீர் செய்ய முடியாததால் கடந்த பிப். 9 ஆம் தேதி அம்மாநில முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சட்டப்பேரவையைக் கூட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அவ்வாறு சட்டப்பேரவை கூடினால் நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவர காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், மணிப்பூரில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.