கடந்த ஜனவரி மாதம் 97-வது ஆஸ்கர் விழா நடைபெற்ற நிலையில், அடுத்த ஆஸ்கர் விருது விழா, அடுத்தாண்டு மார்ச் 15ம் தேதி நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருதுக்கான பரிந்துரைகள் ஜனவரி 22ம் தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் சிறந்த ஸ்டண்ட் வடிவமைப்பிற்கான புதிய ஆஸ்கர் பிரிவு அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், 2028-ம் ஆண்டு நடைபெற உள்ள 100-வது ஆஸ்கர் விழா முதல் இந்த பிரிவில் விருது வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.