Wednesday, December 17, 2025

“தைரியமா காதலை சொன்னதும்; ஓகே சொல்லிட்டேன்” நடிகை அனுஷ்கா ஓபன் டாக்!!

விஜய், ரஜினி, நாகர்ஜூனா, பிரபாஸ், அல்லு அர்ஜூன் என பல உச்ச நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளவர் நடிகை அனுஷ்கா. குறுகிய காலத்திலேயே நட்சத்திர நடிகையாக வலம் வந்தார்.

‘இஞ்சி இடுப்பழகி’ திரைப்படத்திற்காக அவரது உடல் எடையை அதிகரித்து நடித்தார். ஆனால் அந்த திரைப்படம் பெரும் வரவேற்பை பெறவில்லை. 43 வயதாகும் இவர் இன்னும் திருமணம் செய்துக்கொள்ளவில்லை.

இதற்கிடையே, நடிகர் பிரபாஸை திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என்று அவ்வப்போது வதந்திகள் வருவதுண்டு. ஆனால் இருவரும் நண்பர்கள் என கூறப்பட்டது. இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் அனுஷ்கா, “நான் 6-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.

அப்போது ஒரு பையன் என்னிடம் வந்து ‘ஐ லவ் யூ’ என்று காதலை சொன்னார். அந்த வயதில் அதற்கு என்ன அர்த்தம் என்று கூட எனக்கு தெரியாது. ஆனால், அந்த பையன் அதை சொன்னது நான் ஓகே சொல்லிவிட்டேன். அது என் வாழ்க்கையில் அழகான நினைவுகள்” என்று தெரிவித்துள்ளார்.

Related News

Latest News