மசாலா தோசை ஐஸ்கிரீம் நெட்டிசன்களின் பசியைத் தூண்டிவிட்டு வருகிறது.
தென்னிந்திய உணவுகளுள் மிகவும் பிரபலமான மசாலா தோசையுடன் ஐஸ்கிரீம் கலந்து விற்பனை செய்யத் தொடங்கியுள்ளார் டெல்லியிலுள்ள ஓர் உணவக உரிமையாளர்.
இதோ அந்த செய்முறையைப் பாருங்க…
காரமான சட்னி மற்றும் சாம்பாருடன் பரிமாறப்படும் இந்த மசாலா தோசை ஐஸ்கிரீம் டெல்லிவாசிகளுக்குப் புதுமையாகத் தெரிகிறதாம். உங்களுக்கு…?
அனைவருக்கும் பிடித்தமான உணவுகளுள் மசாலா தோசையும் தின்பண்டங்களுள் ஐஸ்கிரீமும் முக்கியமானது. இரண்டும் கலந்த உணவு எப்படி இருக்கும்?
சாப்பிட்டுவிட்டு சொல்லுங்களேன்.