தற்போது ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வரும் வேளையில், நியூ இயர் வாட்ஸ்அப் மெசேஜ் வாழ்த்துக்கள் மூலமாக மோசடி நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. இது சமீப காலங்களில் அதிகரித்து வரும் online scam வகைகளில் ஒன்று என அதிகாரிகள் கூறுகின்றனர்.
எப்படி இந்த மோசடிகள் நடக்கிறது?
லிங்க் உள்ள வாழ்த்து மெசேஜ் நமக்கு வரும். “Happy New Year 🎉 – இதை கிளிக் செய்யவும் என இருக்கும். அந்த லிங்க்கை கிளிக் செய்தால் → போலி வெப்சைட் திறக்கும். அதில் Gift / Cash Offer
“New Year Gift ₹999 – claim now” (தொகைகள் மாறுபடலாம் ) என அறிவித்து அதை அனுப்ப நமது ஏடிஎம் (UPI / Card Details)தகவல்கள் கேட்கப்படும்.
APK / App Download செய்து விட்டால் அவ்வளவுதான். அதாவது அவர்கள் அனுப்பும் “New Year Special App” Download செய்தால் உடனடியாக உங்கள் போன் ஹேக் (Phone Hack / Data Theft) செய்து தகவல்கள் திருடப்படும் வாய்ப்பு உண்டு.
அடுத்து WhatsApp Hack வழிமுறையில் OTP கேட்டு உங்கள் WhatsApp account கைப்பற்றப்படும்.
பாதுகாப்பாக இருப்பது எப்படி?
தெரியாத link-களை click செய்யாதீர்கள். குறிப்பாக OTP, UPI PIN, Card details களை யாருக்கும் கொடுக்காதீர்கள். எவ்வகையிலும் APK / Unknown apps install செய்ய வேண்டாம்.
இதையெல்லாம் மீறியும் நீங்கள் தவறுதலாக லிங்க்கை கிளிக் செய்து தகவல்கள் திருடப்பட்டது போல் சந்தேகம் சிறிது வந்தாலும் உடனடியாக சைபர்கிரைமில் புகார் செய்யுங்கள்.
