இன்னைக்கு என்ன அப்டேட் என கேட்கும் அளவுக்கு whatsappஇல் கிட்டத்தட்ட தினமும் புதிய, சுவாரஸ்யமான அப்டேட்கள் வந்த வண்ணம் உள்ளது.
அண்மையில், whatsapp குரூப்களில் 512 பேர் வரை இருக்கலாம் மற்றும் குரூப்களில் இருந்து பயனர்கள் மற்றவர்களுக்கு தெரியாமல் வெளியேறும் அம்சம் சோதனைக்கு வந்தது.
இந்நிலையில், whatsapp குழுக்களில் இருந்து வெளியேறும் நபர்களின் பெயர்கள் இடம்பெறும் பட்டியல் 60 நாட்கள் வரை குரூப் Infoவில் past participants என போடப்பட உள்ளது.
பயனர்கள் வெளியேறி 60 நாட்கள் ஆன பின், இந்த பட்டியலில் இருந்து அவர்கள் பெயர் நீக்கப்பட்டு விடும் என whatsapp நிறுவனம் தெரிவித்துள்ளது.
பீட்டா (Beta) பயனர்களுக்கு சோதனை முறையில் அறிமுகப்படுத்தப் பட்டிருக்கும் இப்புதிய அம்சங்கள் விரைவில் பொது பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.