வாட்ஸ் அப்பில் தெரியாத குழுக்களில் தானாகவே சேர்ந்துவிட்டீர்களா? அதற்கு வாட்ஸ் அப் ஒரு நல்ல தீர்வை கொண்டு வந்துள்ளது. இதற்காக வாட்ஸ் அப் புதிய ‘Safety Overview Tool’ என்ற பாதுகாப்பு கருவியை அறிமுகம் செய்துள்ளது. அதாவது உங்கள் அனுமதி இல்லாமல் உங்களை குழுவில் சேர்த்தால், குழுவுக்குள் சேர்வதற்கு முன் அந்த குழுவின் முழுமையான தகவல்கள் கிடைக்கும், இதனால் நீங்கள் மோசடியிலிருந்து பாதுகாப்பாக இருக்க முடியும்.
உங்களை எந்த குழுவில் சேர்த்தாலும் குழுவில் சேர்க்கும்போது, வாட்ஸ் அப் அந்த குழுவின் முக்கிய தகவல்களை, யார் சேர்த்தார், குழுவின் பெயர் மற்றும் பாதுகாப்பு குறிப்பு ஆகியவற்றை உங்களுக்கு காட்டும். இதனால் உங்களுக்கு அந்த குழுவில் தொடர்ந்திருக்க வேண்டுமா அல்லது விட்டுவிட வேண்டுமா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளலாம்.
வாட்ஸ் அப்பின் ‘Safety Overview Tool’ உங்கள் பாதுகாப்பை பலப்படுத்த ஒரு முக்கியமான முயற்சி ஆகும். குற்றவியல் மோசடிகள் அதிகரிக்கும் இந்த காலத்தில் இது பயனுள்ளதாக இருக்கும்.