இன்றைய அவசர உலகில் தகவல்களை உடனடியாக பரிமாறிக் கொள்ள வாட்ஸ் அப் செயலி பெரிதும் பயன்படுகிறது. இதனால் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் ஏறத்தாழ 200 கோடி பேர் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் வாட்ஸ் அப் செயலி வழியாக அனுப்பப்படும் குரல் செய்தியில் புதிய அம்சம் விரைவில் அறிமுகமாக உள்ளது. வாட்ஸ் அப்பில் குரல் செய்தி அனுப்பும்போது இடையில் pause செய்து மீண்டும் தொடங்க முடியாது. நாம் சொல்ல வேண்டிய தகவலை பதிவு செய்யும்போது தடுமாற்றம் ஏற்பட்டாலோ மறந்து விட்டாலோ நம்முடைய தகவல்களை துண்டு துண்டு வாக்கியங்களாக பிரித்து அனுப்ப நேரிடும்.
இனி அத்தகைய சிரமம் வாட்ஸ் அப் பயனர்களுக்கு ஏற்படாது. ஏனெனில் குரல் செய்திக்காக நம்முடைய தகவல்களை பதிவு செய்யும்போது pause செய்யும் வசதியை வாட்ஸ் அப் அறிமுகப்படுத்த உள்ளது. அதற்கான பணிகளை வாட்ஸ் அப் தற்போது மேற்கொண்டு வருகிறது.
இதனால் டிசம்பர் மாத இறுதிக்குள்ளாகவோ அடுத்த ஆண்டு தொடக்கத்திற்குள்ளாகவோ குரல் செய்தியில் pause செய்யும் புதிய அம்சம் வாட்ஸ் அப்பில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.