உடனே போய் நிறைய பணம் செலுத்திடுங்க …ப்ராப்ளம் சால்வ்டு
என்று யூத்ஸ் சொல்றது கேட்குது மச்சி…
இது கொஞ்சம் சீரியஸா எடுத்துக்க வேண்டிய விஷயம்….
ஏன்னா… கடந்த சில நாட்களா ஏடிஎம் கொள்ளை, அக்கவுண்டிலிருந்து
பணம் சுருட்டல் என்று இதுபோன்ற மோசடிகள் சில கயவர்களால் நடத்தப்படுகிறது.
இத்தகைய பாதிப்புகளிலிருந்து தப்பித்துக்கொள்ள காவல்துறை வழங்கியுள்ள
தகவலைக் கேளுங்கள்…
வங்கிக் கணக்கு வைத்திருப்போருக்கு அவர்களது கணக்கிலிருந்து
பணம் எடுக்க ஓடிபி, பின் நம்பர் போன்றவை வழங்கப்பட்டுள்ளது.
இந்த ONE TIME PASSWORD (OTP) எண்கள்மூலமாகவோ,
வேறுவகையிலோ உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணம்
எடுக்கப்பட்டால் பதற்றம் அடைய வேண்டாம்.
உடனே 155260 என்னும் எண்ணைத் தொடர்புகொண்டு தகவல்
சொல்லுங்கள். வங்கி நிர்வாகம், உங்கள் கணக்கிலிருந்து எடுக்கப்பட்ட
அந்தப் பணத்தை மோசடிசெய்த நபர்கள் வங்கிக்கணக்கிலிருந்து
எடுத்துக்கொள்ள முடியாதபடி செய்துவிடும்.
இந்த சேவை முற்றிலும் இலவசமானதுதான்.